எப்போதும் கைகள் மென்மையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!!
முகத்தை அழகாக வைத்துக்கொள்ள நாம் செய்யும் பராமரிப்பில், கைகளுக்ககு கொடுக்க மறுக்கிறோம்.
முகத்தை அழகாக வைத்துக்கொள்வது நல்லது தான். ஆனால் தினமும் நம் அன்றாட வேலைகளை செய்வது கைகள் மட்டும் தான்.
கைகளையும் அழகாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்க்கள் இதோ..
தினமும் ஒரிரு முறை கைகளை நன்றாக கழுவ வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை மெனிக்யூர் செய்ய வேண்டும். கோடைக்காலம், குளிர்காலம் என காலங்கள் மாறி மாறி தோன்றுவதால். சருமம் விரைவில் வறண்டு விடும். எனவே சருமத்திற்கு ஏற்றவாறு லோஷன், மாய்ஸ்ரைசர் பயன்படுத்த வேண்டும்.
கைகளை கழுவும் பொழுது ரசாயனம் அதிகமாக இருக்கும் டிஷ் வாஷ், பார் சோப், ஹாண்ட் வாஷ், போன்றவற்றை தவிர்க்கலாம். இதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் தன்மையை பாதிக்கும்.
இரவில் தூங்குவதற்கு முன் மாய்ஸ்ரைசர், வாஸ்லின் வைத்து 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். மறுநாள் காலை வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். வாரத்தில் இருமுறை செய்தால். சருமம் அழகாக மாறும்.
கடினமான வேலை செய்பவர்கள், வேலை செய்யும் பொழுது ரப்பர் உறை அணிந்து கொண்டு செய்ய வேண்டும். வெயிலில் வெளியே செல்லும் பொழுது கையுறைகளை அணிந்து கொண்டு செல்லலாம்.
வைட்டமின் பி , மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது கை களுக்கு மட்டுமல்ல எலும்பு, மூட்டிற்கும், சிறந்தது.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி