இனவெறியை தூண்டும் ட்ரம்ப் பேச்சு..! கமலஹரரிஷ் பதிலடி..! பரபரப்பான அமெரிக்கா..!
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கான பதிலை, ஒவ்வொரு தேர்தலின்போதும், உலகம் உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த முறை, சற்று அதிகமாகவே உலகின் பார்வை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் மீது உள்ளது.
குறிப்பாக, இந்தியர்கள், இந்த தேர்தலின் முடிவை அறிய அதிக ஆர்வத்துடன் உள்ளனர். அதற்கு காரணம் என்னவென்றால், இந்த முறை, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணும், அமெரிக்காவை சேர்ந்தவரும் தேர்தலில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
அதாவது, அமெரிக்காவுக்கான ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 5-ஆம் தேதி நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் டெனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ்-ம் போட்டியிட உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும், தங்களது சார்பில் மிரட்டலனா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிகாகோவில் உள்ள தேசிய கருப்பின பத்திரிகையாளர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், “கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை கொண்டவர். ஆனால், அவர் கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார். எல்லா வழிகளிலும் இந்தியராக உள்ள ஒருவர், திடீரென கருப்பினத்தவராகிவிட்டார்.
நான் அனைவரையும் மதிக்கிறேன். ஆனால், கமலா ஹாரிஸ் வெளிப்படையாக இல்லை” என்று கூறியுள்ளார். நிறவெறியையும், இனவெறியையும் தூக்கிப் பிடிக்கும் வகையில் அமைந்துள்ள டிரம்பின் இந்த பேச்சு, அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”