சென்னையில் தொடரும் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!!
சென்னையில் குடிநீர் வாரியம் சார்பில் விரைவில் அமல்படுத்த உள்ள கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் மூன்றாவது நாளாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுநீரை தடுக்க, கழிவுநீர் தொட்டி தூய்மை பணியின் பல உயிர்கள் இழக்கப்படு கின்றனர், இந்த அசம்பாவிதங்களை தடுக்க இந்த அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலை அமலுக்கு கொண்டுவாந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கழிவுநீர் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனை எதிர்த்து ஜூன் 10ம் தேதி முதல் சென்னை புறநகர் முழுவதும் லாரி உரிமையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் சென்னையின் பல்வேறு இடங்களில் கழிவு நீர் வழிந்து ஓடுகிறது. இந்த போராட்டத்தை நிறுத்துவதற்காக குடிநீர் வாரிய, 14வது மண்டல அலுவலகத்தில் 7பேர் கொண்ட குழு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பேச்சுவார்த்தை முடிக்க பட்டு, கழுவுநீர்கள் அகற்றபடுமா என்று அடுத்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
Discussion about this post