பாஜகவில் பதவி வழங்குவதில் சூர்யா சிவாவிற்கும், பெண் நிர்வாகி டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் நிர்வாகியை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, தனது தந்தை மற்றும் திமுக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து திமுக நிர்வாகிகளை தொடர்ந்து விமர்சித்தும் பல்வேறு கருத்துகளை சூர்யா தெரிவித்தார்.
இதன் காரணமாக அண்ணாமலையிடம் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். இந்தநிலையில் பாஜகவில் பதவி வழங்குவது தொடர்பாக சூர்யா சிவாவிற்கும் சிறுபான்மையினர் அணி தலைவராக டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இந்த ஆடியோவில் சூர்யா சிவா டெய்சி சரணை கடும் ஆபாச வார்த்தைகளால் திட்டும் இந்த ஆடியோ பல தரப்பினரிடமும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.