மூத்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 86 வயதான திரு.ஒளவை நடராஜன் 2010 முதல் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகம் இருந்ததால் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழறிஞர் ஒளவை நடராஜன் காலமானார். இவர் 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்தவர். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் துணை தலைவராகவும் மேலும் மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை சரபோஜி அரசுக் கல்லூரிகளிலும் தமிழ் விரிவுரையாளராக பணிபுரிந்தவர்.
இது மட்டுமின்றி டெல்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவரின் மறைவிற்கு இலக்கிய வாதிகள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழறிஞர் ஒளவை நடராஜன் உடலுக்கு தமிழக முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.மேலும் தமிழ் கவிஞர் வைரமுத்து உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிறந்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/fL69cEzIS3
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 21, 2022
முதல்வர் ஸ்டாலின் அவ்வை நடராஜன் மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “”சிறந்த தமிழறிஞர் ஒளவை நடராசன் (87) வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன், எண்ணற்ற நூல்கள், பலநூறு மாணவர்களை நம்மிடம் விட்டுச் சென்றுள்ள பெருந்தகை ஔவை நடராசனின் மறைவு தமிழ்த்துறையினர்க்கும், கல்விப்புலத்தார்க்கும் பேரிழப்பாகும்” அவரின் இறுதி அஞ்சலி காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.