கடந்த 2005ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இயக்குனர் பி.வாசு இயக்கி வெளியான சந்திரமுகி திரைப்படம் உலகம் முழுவதும் மிக பெரிய வெற்றி பெற்றது. 200 நாட்களுக்கு மேல் ஓடிய இந்த திரைப்படம் பல விருதுகளை வென்றது. இப்படம் ரஜினிக்கு மட்டுமின்றி பல கலைஞர்களின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, சந்திரமுகி 2 ல் ராகவ லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது படத்தின் ஒன் லைன் குறித்து இணையத்தில் இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் டாக்டராக நடித்திருப்பார் ஆனால் வேட்டையன் மன்னன் என்ற சிறு வேடத்திலும் தோன்றி அது மக்களிடம் இன்றும் பிரபலமாக இருக்கிறது அதை தொடர்ந்து தான் வேட்டையன் காதாபாத்திரத்தை கொண்டு முழுநீல படமாக சந்திரமுகி 2 உருவாக்கி வருகிறார்களாம். ராகவா லாரென்ஸ் மன்னரின் வேடத்தில் நடிப்பதாகவும் ஆனால் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தகுந்த நடிகையை தேடி வருவதாகவும் தகவல் கசிந்து வருகிறது. இந்த படத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனை என்ன வென்று சந்திரமுகி 2வில் இயக்குனர் வாசு வெளிப்படுத்தவுள்ளதாக தெரிகிறது.
அவ்வாறு இப்படம் உருவானால் ஜோதிகாவின் நடிப்பை மிஞ்சும் அளவிற்கு யார் சந்திரமுகியாக நடிப்பார் என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் இப்படம் பிரபண்டமாக உருவாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.