என்னை கொஞ்ச கொஞ்ச.., வா மழையை..!!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.., சாலையில் சூழ்ந்த மழை நீர்.., சிரமத்தில் வாகன ஓட்டிகள்..
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது.. இன்னும் 2மணி நேரத்திற்கும் மேல் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் முக்கியமாக எம்.சி.ஆர் நகர், பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, மெரீனா, சாந்தோம் போன்ற பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலான மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் இன்று முதல் இன்னும் நான்கு நாட்களுக்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை மட்டுமின்றி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் இன்னும் நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
Discussion about this post