தமிழகத்தில் 45 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையராக சத்தியபிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
வித்யா ஜெயந்த் குல்கர்னி ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று டெல்லி சிபிஐ ஏடிஜிபி ஆகவும், வன்னியப்பெருமாள் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை மின்பகிர்மான ஏடிஜிபியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அருண் ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஏடிஜிபி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கல்பனா நாயக் ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்வரமூர்த்தி ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கி போலீஸ் அகாடமியின் ஏடிஜிபியாகவும், ஆவி பிரகாஷ்க்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் மத்திய அரசு பணியிலேயே தொடர்வார். சந்தோஷ் குமார் தமிழ்நாடு காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாகவும், கார்த்திகேயன் மத்திய மண்டல ஐஜியாகவும், விஜயகுமார் டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி கோவை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திஷா மிட்டல் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையராகவும், துரை டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி ராமநாதபுரம் சரக டிஐஜியாகவும், மகேஷ் டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி உளவுத்துறை பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக மாற்றம். அரவிந்தன், விக்ரமன், சரோஜ்குமார் தாக்கூர், மகேஷ்குமார் உள்ளிட்ட 9 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post