வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.உலக நாடுகளின் கடும் எதிர்ப்பு மற்றும் ஐநாவின் பொருளாதாரத் தடைகள் என எதற்கும் கட்டுப்படாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
புத்தாண்டு தினத்திலும் ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடுகள் தொடர் அச்சத்தில் வைத்துள்ளது.
இந்தநிலையில் கிம் ஜாங் உன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாட்டின் ராணுவ பலம் இரு மடங்காக உயர்த்தப்படும் என கூறியுள்ளார்.
சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உற்பத்தியின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post