பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்க உள்ளது. இப்போதே முன் பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்பதற்காக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
2024ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி முதல் பயணிகள் பொங்கல் பயணத்தை மேற்கொள்ள முடியும், அதற்கான நாளை முன்பதிவு தொடங்க இருப்பதாக இரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பயண செய்ய இருக்கும் பயணிகள் செப்டம்பர் 14ம் தேதியும் ,
ஜனவரி 13ம் தேதி பயணம் செய்ய இருக்கும் பயணிகள் செப்டம்பர் 16ம் தேதியும் ,
ஜனவரி 14ம் தேதி பயணம் செய்ய இருக்கும் பயணிகள் செப்டம்பர் 17ம் தேதியும்,
ஜனவரி 15ம் தேதி பயணம் செய்யபவர்கள் செப்டம்பர் 18ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அதுபோல ஜனவரி 17ம் தேதி பயணம் செய்பவர்கள் செப்டம்பர் 19ம் தேதியே முன்பதிவு செய்யதுக்கொள்ள வேண்டும் என ரயில்வே வாரியம் கேட்டுக் கொண்டுள்ளனர் .
IRCTC இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரியில் பொங்கலுக்காக பயணிக்க இருக்கும் பயணிகள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ள தொடங்குமாறு ரயில்வே வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..