கிணறு வெட்டும் பணியில் ஈடுப்பட்ட நபர்களுக்கு ஏற்பட்ட சோகம்..!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அருங்குறிக்கை என்ற கிராமத்தில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான 100 அடி விவசாய கிணற்றில் ஆழப்படுத்தும் பணிகள் நேற்று இரவு நடந்தன. இதற்காக பொக்லைன் இயந்திரத்தில் கயிறு கட்டி தணிகாசலம் (48), ஹரி கிருஷ்ணன் (40), முருகன் (38) ஆகிய 3 பேர் இறங்கியுள்ளனர்.
அப்போது பொக்லைன் இயந்திரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு எதிர்பாரதவிதமாக அறுந்ததால் 3 பேரும் கிணற்றில் விழுந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூன்று பேரையும் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று பேரும் உயிரிழந்தாக தெரிவித்தனர். இதையடுத்து கிணற்றின் உரிமையாளர், மற்றும் பொக்லைன் இயந்திரத்தை இயக்கியவர் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”