ஆந்திராவில் மாணவர்கள் செய்த செயல்..! வைரலாக பரவும் வீடியோ..!
இந்தியாவில் இப்படி பட்டவர்களை பார்ப்பதற்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. இந்தியாவில் இப்படிபட்ட மாணவ, மாணவிகள் பார்ப்பதற்கு எந்த அளவிற்கு சந்தோசமாக இருக்கிறதோ அதே அளவிற்கு இதுபோன்றவர்களை பார்க்கும் போது வேதனையும் கொடுக்கிறது. குறிப்பாக கேரளா, ஆந்திரா மாநிலங்களில் நடப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது. நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்று நீங்களே பாருங்க.
தமிழ்நாட்டு பள்ளி, கல்லூரிகளில் இதெல்லாம் சாத்தியமில்லை.. அதெல்லாம் 30 வருடங்களுக்கு முன்பு இருந்திருக்கலாம்.. ஜாதிக் கட்சிகள் தமிழகத்தில் தலைதூக்கியப் பிறகு இந்த மாதிரி ஒற்றுமையான காட்சிகளை பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது..
ஏய்.. நீ அந்த சாதி..! ஏய்.. அந்த சாதிக்காரப் பயல, பக்கத்துல உட்காரவிடாதே..
ஏய்..கண்ட சாதிப் பய கூட என்ன சகவாசம் வேண்டி கிடக்கு.
ஏய்.., அந்த சாதிப்பய கூட எதுக்கு ஸ்கூலுக்கு போற..
ஏய்., அவன் என்ன சாதி , அவனையெல்லாம் கோயில் திருவிழாவுக்கு கூப்பிட்டு வந்துருக்க.. போன்ற சரித்திரப் புகழ் பெற்ற வசனங்கள் பள்ளி, கல்லூரிகளில் வலம் வர ஆரம்பித்தப் பிறகு , எந்த பள்ளி , கல்லூரியில் மாணவர்கள் ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள் என்பதை யாராவது நிரூபியுங்கள் பார்ப்போம்..
அரசியலில் நுழைந்த சாதி , பள்ளி, கல்லூரிகளிலும் புகுந்து தினமும் ஊர் பஞ்சாயத்து வரை அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. ஆசிரியர் அடித்தால் உடனே கலவரம். அந்த சாதி வாத்தி என்னை அடிச்சுட்டான் என்று. எப்படி இருந்த நாடு இப்போது குட்டிச் சுவராய்ப் போய் கிடக்கிறது.
இந்த வீடியோ ஆந்திரப் பிரதேச கல்லூரி ஒன்றின் மாணவிகள் குறும்பு செய்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.. இப்படியொரு குறும்பு விளையாட்டு தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரிகளில் இப்போது விளையாட முடியுமா என்று..?
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..