விண்ணிற்கு பறக்கும் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்..!!
இஸ்ரோ வடிவமைத்துள்ள புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக்கோள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 15-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறியரக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இஒஎஸ்-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. அதன் ஆயுட்காலம் ஒரு ஆண்டு மட்டுமே. இது தரையில் இருந்து சுமார் 475 கி.மீட்டர் தொலைவில் உள்ள புவிவட்டப் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதில், எலெக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (GNSS-R) மற்றும் சிக் யுவி டோசிமீட்டர்(SiC UV Dosimeter) ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது இஒஐஆர் கருவி பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் இரவில் துல்லியமான படம் எடுக்க உதவி செய்யும். சுமார் 175 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளின் ஜிஎன்எஸ்எஸ்-ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும்.
இது மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது. இது சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வரிசையில் கடைசி ஏவுகணை இது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..