தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய கூலி தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்..!! பரபரப்பான மதுராந்தகம்..!!
மதுராந்தகம் அருகே தேங்காய் பறிக்க ஏறிய கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி செய்யூர் போலீசார் விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஓதியூர் கிராமத்தில் தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் மரம் ஏறி கூலி தொழில் செய்து வருபவர் சேகர் 57 இவர் இன்று அதே பகுதியில் மணி என்பவர் வீட்டில் தேங்காய் பறிக்க மரம் ஏறி உள்ளார்..
அப்பொழுது மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்த பொழுது தென்னை மரத்தில் காய்ந்த தென்னை மட்டை ஒன்று கீழே விழுந்துள்ளது மரத்தை ஒட்டிய பகுதியில் உயர் அழுத்த மின் வயர்கள் மீது தென்னை மட்டை விழ அதைப் பிடித்து இழக்கும் பொழுது மரம் ஏறிய சேகர் மீது மின்சாரம் பாய்ந்ததில் மரத்திலிருந்து கீழ விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.சேகரை பரிசோதித்த மருத்துவர் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளார்..
உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதனர். அங்கு வந்த செய்யூர் காவல்துறையினர் இறந்தவர் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது சம்பந்தமாக செய்யூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..