நூடுல்ஸ் சாப்பிட்ட 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்..! போலீஸ் விசாரணை..!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி கரிம்குளத்தில் உள்ள பள்ளிப்பறம்பில் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஜோவனா சோஜன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு சிறுமி இரவு நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளார். அது எதிர்பாராத விதமாக அவரது தொண்டையில் சிக்கியுள்ளது. இதையடுத்து அந்த சிறுமிக்கு வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவரது பெற்றோர் அடிமாலியில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில் சிறுமி, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை அனுப்பி வைத்து சிறுமியில் பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”