கவுண்டம்பாளையம் படம் வெளியிட தடை..! எஸ்.பி. அலுவலகத்தில் விசிக அளித்த மனு..! பரபரப்பான ஈரோடு..!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ரஞ்சித். அதோடு இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் கூட இவர் நடித்து இருக்கிறார்.
இறுதியாக இவர் கடந்த 2015ம் ஆண்டு நடிகர் ஜீவன் நடித்த அதிபர் என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழில் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. என்றாலும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.. இப்படி இருக்க தற்போது அவரே ஒரு படத்தை இயக்கி நடித்துள்ளார்.
நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள “கவுண்டம்பாளையம்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் கவுண்டம்பாளையம் படத்தை வெளியிடக்கூடாது என “விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்”..
ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். எம். சாதிக் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது..
தமிழகத்தில் நாளை குழந்தை C/O கவுண்டம்பாளையம் என்னும் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை குறிப்பிட்டு பல வசனங்கள் இடம் பெற்று இருக்கின்றன.
மேலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வரும் எங்கள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. நட்பு இருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திரைப்படத்தில் வசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இத் திரைப்படத்தில் தமிழகத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட கூடியதும், தமிழ் மக்களுக்கான கட்சியாக இருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை மறைமுகமாக தாக்கி பல வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
இத்திரைப்படம் வெளியாகும் ஆனால் மேற்கு மண்டலங்களில் அமைதியாக இருக்கக்கூடிய சமுதாய மக்களுக்குள் சாதி மோதல்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்..
– லோகேஸ்வரி.வெ