பிறந்து 12 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!! தீவிர போலீஸ் விசாரணை..!!
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் ராஜேஷ்- பழனி செல்வி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்து 12நாட்களே ஆன ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் பிறந்த குழந்தைக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ராஜேஷ் அவரது மனைவி பாண்டி செல்வி, அவர்களது இரண்டு மகள்கள் மற்றும் பாண்டி செல்வியின் உறவினர்களான செந்தில் மனோகரன் (வயது 70), அங்காலேஸ்வரி (வயது 58) ஆகியோருடன் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வாடகை கார் மூலம் சென்றனர்.
பின்னர் சிகிச்சை முடிந்த வீடு திரும்பி கொண்டிருந்த போது முன்னால் ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென நெடுஞ்சாலையில் நிறுத்தியதால் எதிர்பாராதவிதமாக கார் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளனது.
இந்த விபத்தில் ராஜேஷ் மற்றும் அவரது மகள்கள் இரண்டு பேர்,உறவினர்கள் செந்தில் மனோகரன், அங்காலேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர், ராஜேஷ் மனைவி பாண்டிச்செல்வி மற்றும் அவரது கைக்குழந்தை ஆகிய மூவரும் பலத்த காயத்துடன் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்து வந்த போலீசார் விபத்து நொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..