நடிகர் சங்கம் செயற்குழு கூட்டம்..!! நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..!!
இன்று நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து., தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது..
சென்னை தேனாம்பேட்டையில்.. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்..
இந்த கூட்டத்தில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
நடிகர் சங்கம் சார்பில் நன்றி :
முன்னதாக பாராம்பரியமிக்க நம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கும், உறுப்பினர்களுக்கும் அனைத்து வகையிலும் ஆதரவளித்து உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், சங்க உறுப்பினரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்.,
அமைச்சர்களுக்கும், அரசு செயலாளர்களுக்கும், அரசுத்துறை இயக்குனர்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது..
திரையரங்கம் :
தென்னிந்திய நடிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவுள்ள இரைப்படம் நகரம் குறித்த அறிவிப்பும் கட்டடம் சென்னையை பூந்தமல்லியில் கட்டி முடிக்கப்படும்
சென்னை தீவுத்திடலில் கட்டமைப்பு வசதிகள் மற்றும் இயற்கை அழகுகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய திரையரங்கம் கட்டப்படவுள்ளது.., அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என தெரிவித்துள்ளது..
கட்டண சலுகை :
நமது சங்கத்தின் துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் சங்கத்தில் நிறைவேற்றப்படாமல் இருந்த தீர்மானங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார்..
மேலும் கிராமிய கலைஞர்கள் அரசு பேருந்தில் பயணிக்கும் போது இசைபொருட்களை எடுத்து செல்லும் போது அதற்கு கட்டணம் வசூல் செய்யக்கூடாது எனவும் கலைஞர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் பயணம் செய்யும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தற்கு நன்றி தெரிவித்தனர்..
கட்டணமில்லா பயணம் :
கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் போது கட்டணம் இல்லா பயணம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுடன் அவருடன் உதவியாளரும் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
கலைஞர்களுக்கான நிதியுதவி :
சில கலைஞர்கள் மிகவும் உடல் நலிந்த நிலையில் இருப்பதால் இப்படி பட்ட சூழலில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசின் நிதியில் இருந்து தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயல்படுத்தியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, 2020-21 மற்றும் 2021-22-ஆம் ஆண்டுகளுக்கான தெரிவு செய்யப்பட்ட 1000 நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு 1.04.2023 முதல் மாதந்தோறும் ரூ.3,000/- வீதம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..