பயிர்கள் கருகியதால் வேதனையில் விவசாயிக்கு நேர்ந்த சோகம்..!! மதிமுக வைகோ வேண்டுகோள்..!!
நீரின்றி பயிர்கள் கருகியதை கண்டு மாரடைப்பால் உயிரிழந்த விவசாயி ராஜ்குமார் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி எம்.கே. ராஜ்குமார், சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்துள்ளார்.
இலட்சக்கணக்கில் கடன் வாங்கி பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மிகுந்த மன வேதனை அடைந்த அவர், தன் நிலத்தில் பயிர்கள் அழிவதைக் கண்டு வேதனையடைந்த அவர், நிலத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு ராஜ்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தண்ணீர் இன்றிப் பயிர்கள் கருகியதால், கண்ணீர் விட்டு கதறிய ராஜ்குமார் உயிர் இழந்தது தாங்காத துயரத்தைத் ஏற்படுத்தியுள்ளாதாக குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் நீர் திறந்து விடாமல் அடாவடியாக செயல்பட்டு வருவதால், காவிரிப் பாசனப் பகுதிகளில் மூன்றரை லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் அழிந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள வைகோ, விவசாயி ராஜ்குமார் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கி ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..