பாஜகவுடன் கூட்டணி இல்லை..!! பாஜகவை யாரும் விமர்சிக்க கூடாது..!! எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு..!!
கூட்டணி முறிந்து விட்டதால் யாரும் பாஜகவை கடுமையாக விமர்சிக்க கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிவில், அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது என்று அதிகாரபூர்வமாக அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
இது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல , 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும், இதனால் எந்த பிரச்சனை வந்தாலும் அதனை சந்திக்க தயார் என்றும் கூறினார்.
மேலும் , கூட்டணி முறிந்து விட்டதால் யாரும் பாஜகவை கடுமையாக விமர்சிக்க கூடாது என்றும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசும் வரை கட்சி நிர்வாகிகள் அமைதிகாக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அதிமுக அறிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடனான முடிவு குறித்து பாஜக தேசிய தலைமை பேசும் என்றும், சரியான நேரத்தில் இது குறித்து பதில் அளிப்பார்கள் என கூறினார்..
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவு எடுத்துள்ளதாக கூறினார்.
அதிமுக பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும் என்றும் அதிமுக கூட்டணி முறிவு, பற்றி கருத்து கூற முடியாது எனவும் கூறினார்.
Discussion about this post