இரண்டாவது கணவரால்… முதல் கணவனின் மகளுக்கு நேர்ந்த சோகம்…!
ஈரோடு வீரப்ப சத்திரம் பகுதியில் நவீன் ராஜ், தமிழ்ச்செல்வி என்ற தம்பதியர்கள் வசித்து வருகின்றனர்.
தமிழ்ச்செல்விக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவருக்கு 09 வயதில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது.
இந்நிலையில் இரண்டாவதாக நவீன் ராஜ் என்பவருடன் 06 வருட காலமாக வாழ்ந்து வருகிறார்.மேலும் இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை இருக்கிறது
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நவீன்ராஜ் மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்விக்கு கருத்து வேறுபாட்டின் காரணமாக குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று நவீன் ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் சண்டையிட்டு கொண்டனர் சண்டை முற்றி அது கைகலப்பாக மாறி இருக்கிறது.
இந்த நிலையில் மனைவி தமிழ்ச்செல்வியையும் மற்றும் மூத்த மகள் நிவாசினியை தந்தை நவீன் ராஜ் சரமாரியாக தாக்கியுள்ளார்.
அடி தாங்க முடியாமல் உடம்பு மற்றும் தலை பகுதியில் ரத்தம் வலிய அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்திருக்கின்றார்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் நிவாசினியை மீட்டு பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர். பின்பு தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த போலீசார்
பெண் பிள்ளை நிவாஷினி மற்றும் அவரது அம்மா தமிழ்செல்வியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட நவீன் ராஜை போலீசார் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
சிறு பெண் பிள்ளை என்று கூட பாராமல் தந்தை ரத்தம் வரும் அளவிற்கு சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்