சரமாரியாக கேள்வி கேட்ட ஸ்டாலின்..! கள்ளக்குறிச்சி சென்ற உதயநிதி..! 10 அதிகாரிகள்..?
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் 37 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு எதிர்க் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது பற்றி அமைச்சர்களிடம் சரமாரி கேள்விகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளாராம். தலைமை செயலகத்தில் நடந்த மீட்டிங்கில் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
அதனுடன் கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சத்திற்கான காசோலையையும் அவர் வழங்கினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷசாராயம் விவகாரத்தில் அலட்சியமாக இருந்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.பி சமய சங் மீனா
டி.எஸ்.பி. தமிழ் செல்வன்
இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் ஆனந்தன்
எஸ்.ஐ ஷிவ் சந்திரன் மற்றும் பாண்டி செல்வி
எஸ்.ஐ பாரதி
எழுத்தர் பாஸ்கரன்
ஸ்பெஷல் எஸ்.ஐ மனோஜ்
மற்றும் டி.எஸ்.பி திருக்கோவிலூர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ