பெங்களூருவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் பயணிக்கு நேர்ந்த சோகம்..!! பயணிகள் உஷார்..!!
பெங்களூரில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் பயணித்த புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த நகை வியாபாரி சதிஷ்குமார் என்பவரிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் பணமும், 5 கிலோ வெள்ளியும் கடத்தப்பட்டு இருப்பதாக சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விவரம் பற்றி அவரிடம் கேட்ட பொழுது, சில நாட்களுக்கு முன்னே பெங்களுருவில் இருந்து சென்னை வருவதற்காகன் ரிசர்வேஷன் பெட்டியில் புக்கிங் செய்து விட்டு நேற்று இரவு ஏறினேன்.., நான் புக்கிங் செய்த கூபேயில் வடமாநிலத்தவர்கள் ஏறி இருந்தார்கள்.
நாங்கள் புக்கிங் செய்த கம்பார்ட் மென்டில் நீங்கள் எப்படி ஏறலாம் என கேட்டு சண்டையிட்டோம் ஆனால் அவர்கள் போகாமல் கழிப்பறை பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள் நாங்கள் எதுவும் அதன் பின் சண்டையிடவில்லை, நான் ஒரு நகை வியாபாரி பணம் மற்றும் வெள்ளியை ஒரு சூர்ட்கேஸில் வைத்து அதன் மேல் துணியை வைத்து எடுத்து வந்தோம் காலை பார்த்தல் அந்த சூர்ட்கேஸையை காணோம்.
அவர்களையும் காணவில்லை, நேற்று கேட்டதற்கு சென்னை சென்ட்ரல் செல்ல வேண்டும் என சொன்ன வடமாநிலத்தவர்கள்.., காலை சென்ட்ரல் வரும் முன் இறங்கிவிட்டார்கள். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை சிறு சந்தேகம் இருக்கிறது என காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
Discussion about this post