தந்தையால் 15 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள நவுசாகர் பெரோஸ் பகுதியை சேர்ந்தவர் தாயாப். இவருக்கு திருமணமாகி சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தநிலையில் குழந்தை பிறந்து 15 நாட்களே ஆன நிலையில் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் குழந்தைக்கு மருத்துவம் பார்க்கும் அளவிற்கு தாயாப்விடம் போதிய வசதி இல்லாமல் தவித்துள்ளார்.
ஏழ்மையில் வாழும் தாயாப் குழந்துக்கு மருந்து வாங்க பணம் இல்லாத காரணத்தால் குழந்தையை கொல்ல முடிவு செய்துள்ளார். இதனால் கனத்த இதயத்துடன் யாருக்கும் தெரியாமல் குழித் தோண்டி குழந்தையை உயிருடன் புதைத்துள்ளார்.
இதில் குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் குழந்தையின் தந்தையான தாயாபை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமையின் காரணமாக தந்தையே 15 நாளே ஆன குழந்தையை உயிருடன் புதைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”