கொடைக்கானல் கரடிச்சோலை அருவியை பராமரிப்பு செய்ய சுற்றுலா பயணிகள் கோரிக்கை..!!
கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள கரடிச்சோலை அருவியை சுற்றியுள்ள இடங்களை பாரமரித்து, சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர கோரி கோரிக்கை விடுதுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர்ப்பகுதியில் உள்ள கரடிச்சோலை என்ற வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது “கரடிச்சோலை” அருவி.
கடந்த 2019 ஆம் ஆண்டு வரை சுற்றுலா பயணிகளை அனுமதித்து இருந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு முதல் இந்த அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கொடைகனால் நகரினுள் உள்ள இது போன்ற எழில் கொஞ்சும் அருவிகளை காண சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வரும் வனத்துறையினர், பாம்பாறு அருவி மற்றும் கரடிச்சோலை அருவி பகுதிகளை முறையாக பராமரித்து, பயணிகள் காண ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரி சிவக்குமாரிடம் பேசிய பொழுது, கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் முறையான சட்ட அனுமதியை பெறுவதற்கு சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், விரைவில் அருவி பகுதிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post