சேலம் ஆத்தூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்..!! நகராட்சி அலுவலகம் முன் முற்றுகை..!!
ஆத்தூர் அருகே நரசிங்க புரம் நகராட்சியில் பணியாற்றி வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 71 பேருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்காததால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன, இந்த வார்டுகளுக்கு தூய்மை பணியாளர்களாக 71 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தை தனியாருக்கு சொந்தமான ஹெல்த் கேர் டெக்னாலஜி என்ற நிறுவனம் மூலம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் நரசிங்கபுரம் நகராட்சியில் பணியாற்றும் 71 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்காததால் இன்று காலை பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 71 பேரும் பணிக்கு செல்லாமல் நிலுவையில் உள்ள மூன்று மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த 18 மாதங்களாக இதற்கு முன்னால் இருந்த ஈஷா ஒப்பந்த நிறுவனம் இவர்களுக்கு PF பணம் முறையாக செலுத்த வில்லை எனவும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையாளர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆகியோர் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சம்பளம் வழங்காமல் போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..