புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு…!!
புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த மூன்று தினங்களாக வானம் மேகமூட்டமுடன் காணப்பட்டு வருகிறது மேலும் குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவுகிறது இந்நிலையில் புதுச்சேரி கடலானது வழக்கத்திற்கு மாறாக காலை முதல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடல் அலைகள் ஆர்ப்பரித்து வருகிறது.
இதனால் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடலில் இறங்கவோ குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை என்பதால் புதுச்சேரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
மேலும் பொதுமக்களும் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து தங்களது பொழுதை கழித்து வரும் நிலையில் யாரும் கடலில் இறங்கி குளிக்காதவாறு பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை பகுதியில் காலை முதலே போலீசார் மற்றும் நீச்சல் வீரர்கள் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..