மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இறந்தவர்களைக் காட்டி பணம் சம்பாதிக்கும் கேவலமான ஊழல்களை பாஜக செய்து கொண்டு வருகின்றனர் – இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன்.
சென்னை கோடம்பாக்கம் மார்கெட் அருகில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய பாஜகவினுடைய மோடி அரசை கண்டித்து மத்திய சென்னை சார்பில் , வரும் 7 ம் தேதி காலை 10 மணி அளவில் அண்ணாசாலையில் உள்ள
தபால் நிலையம் முன்பு பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பாஜக ஒன்றிய மோடி அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும் வேலை வாய்ப்பினை வழங்கிடவும், போன்ற மக்களுக்கு விரோதமான செயல்களை கண்டித்து மாபெரும் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர், அது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளும் வகையிலும் பொது மக்களுக்கு துண்டு சீட்டை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் கொடுத்தனர்.
அப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கைகளில் பாஜக அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் ஒன்றிய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஜி ராமகிருஷ்ணன்,
பாஜக ஒன்றிய மோடி அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலை வாய்ப்புகளை வழங்கிடவும் வலியுறுத்தி வரும் 7 ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி அரசு பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து ஆட்சிக்கு வந்ததாகவும், கடந்த ஒன்பது ஆண்டுகளாகியும் இதுவரை வாக்குறுதிகளை எதையும் மக்களுக்காக நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு உணவு விலையானது 65 சதவீதம் உயர்ந்துள்ளது தவிர மக்களின் வருமானம் உயரவில்லை.அதேபோல நெடுஞ்சாலை துறைகளிலும் பல்வேறு வகையான ஊழல்களை செய்து வருகின்றனர். மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இறந்தவர்களைக் காட்டி பணம் சம்பாதிக்கும் கேவலமான ஊழல்களை பாஜக செய்து கொண்டு வருகின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் ஒரே கலாச்சாரம் என்பது எல்லாம் ஒரு சர்வாதிகார பாதையில் செல்லக்கூடிய முயற்சி, ஆகையால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது அரசியல் சட்டத்திற்கு புறம்பானதாகும்.
தணிக்கையாளர் அறிக்கையில் 5 டோல் கேட் பரிசோதனை செய்துள்ளனர். 128 கோடி ரூபாய் செலவுக்கு மேல் வசூல் செய்து உள்ளனர். இரண்டு நாள் முன்பு டோல் கேட் கட்டணம் கூட உயர்த்தி உள்ளனர். இந்தியா கூட்டணி கூட்டம் முதல் முறை கூடியதும் பிரதமரும் கூட்டம் ஏற்படுத்தினார். அடுத்தக்கூட்டத்தின் போது கேஸ் விலையை குறைத்தார். இப்போது 18 ஆம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் இருப்பதாக சொல்கிறார்.அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்றார்.