தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளியின் விலை அதிகமாக விற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களாக விலை குறையத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் மாத இறுதியில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென ஜூலை மாத துவக்கத்தில் விலை ஏற்றம் செய்யப்பட்டு ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வந்த பருவமழையின் காரணத்தினாலும் போதுமான தக்காளி விளைச்சல் இல்லாமல் தொடர்ந்து விலையேற்றம் ஏற்பட்டு வந்தது.
இதனை அடுத்து, பொதுமக்களில் நலன் கருதி தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக தக்காளியின் விலை கிலோ ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலும் தக்காளியின் விலை ரூ. 200 ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ஓரளவுக்கு தக்காளியின் விலை குறைய ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், நேற்று சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கிலோ ரூ. 60க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று மேலும் ரூ. 10 குறைந்து 50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தக்காளியின் விலை மீண்டும் சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.