திராவிட இயக்கத்தின் வேர் பிறந்த தினம் இன்று..!
திராவிட லெனின்
இன்று 01 06 2023 திராவிட இயக்கத்தின் வேர்
சர் ஏ டி பன்னீர்செல்வம் அவர்களின் 135 வது பிறந்தநாள் அவர் வாழ்ந்தது 52 ஆண்டுகள் குறைந்த வயது ஆனால் நிறைந்த புகழ் பிரித்தானிய அமைச்சரவையில் இந்திய அமைச்சரவையின் ஆலோசகராக பதவியேற்று இருப்பாரானால் திராவிட இயக்கத்திற்கும் தமிழகத்தின் அரசியல் சூழலும் வேறு திசையில் பயணித்து இருக்கும் இயற்கையும் தமிழருக்கு பகை ஆயிற்று ஆம் தமிழர்களை வஞ்சித்து விட்டது.
தஞ்சை
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர் நன்னிலம் சாலையில் செல்வபுரத்தில் 01 06 1888 ஆம் ஆண்டு கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் ஆரம்பப் பள்ளியை தன் ஊரிலேயே படித்து கல்லூரிப் படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் மேல்படிப்பை இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் சென்று பார் அட் லா பட்டம் பெற்று வழக்கறிஞராக 1912 தாயகம் திரும்பி தஞ்சையில் வழக்கறிஞராக பின் அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியவர்.
நீதிக்கட்சி
நீதிக்கட்சியால் கவரப்பட்டு இறுதிவரை நீதிக் கட்சிக்காரர் ஆகவே மறைந்தார்
தஞ்சையில் வழக்கறிஞர் பணி செய்து வரும் வேளையில் அனைத்து மக்களின் நன்மதிப்பைப் பெற்று 1918 தஞ்சை நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற்று சீரிய முறையில் பணியாற்றினார்.
1924 துவங்கி தந்தை பெரியார் அவர்களின் நன்மதிப்பைப் பெற்று அவருக்கு துணையாக பணியாற்றினார்
16 9 1927 தஞ்சை நகருக்கு வந்த மகாத்மா காந்தி அவர்களை சந்தித்து சமூக நீதி குறித்து பேசியதன் விளைவாக அன்று மாலை தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காந்தி அவர்கள் சில நண்பர்களுடன் இன்று கலந்துரையாடினேன் பிராமணரல்லாதார் நிலை குறித்து விவாதித்தேன் இந்த வாதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது முன்னைக் காட்டிலும் சற்று நல்ல முறையில் பிராமணரல்லாதார் இயக்கத்தைப் பற்றி நன்கு புரிந்து கொண்டேன் என்று பேசினார்.
பொறுப்புகள்
1924 துவங்கி 1930 வரை தஞ்சை மாவட்ட ஜில்லா போர்டு தலைவராக பணியாற்றினார்
01 03 29 சைமன் குழு முன் சாட்சியமளித்தார்
1930 இல் சட்டமன்ற உறுப்பினர் கே வி ரெட்டி அவர்களின் தலைமையிலான இடைக்கால அமைச்சரவையில் 4 மாதம் அமைச்சராக பணியாற்றினார்
1930 31 ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் நீதிக்கட்சியின் சார்பிலும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதியாகவும் பங்கேற்றார்.
மொழிப்போர்
மொழிப்போரில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்ட போது அது குறித்து சட்டமன்றத்தில் பேசிய சர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு பிரிமியர் முதல்வர் ராஜாஜி அவர்கள் பதில் பேசும்போது இந்தியை இந்த நாட்டில் எதிர்ப்பவர்கள் ஈவேரா பெரியாரும் சோமசுந்தர பாரதியார் மட்டும்தான் என ஏளனமாக பேசினார் அதற்கு பதிலளித்த சர் ஏ டி பன்னீர்செல்வம் அவர்கள் இந்தியை எதிர்ப்பவர்கள் நீங்கள் கூறும் இருவர் மட்டும்தான் என்றால் இந்தியை ஆதரிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டும்தான் எனவே நாங்கள் பெரும்பான்மை என்று பேசினார் இந்தி திணிப்புக்கு ஒரு நாள் நீங்கள் வருத்தப் படக்கூடும் என்று தீர்க்கதரிசனமாக சொன்னார் பிற்காலத்தில் அது நடைபெற்றது ஆம் ராஜாஜி அவர்கள் நான்காம் கட்ட மொழிப் போரில் பங்கேற்றார் என்பது வரலாறு.
சர் பட்டம்
1938ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு சர் பட்டம் வழங்கி சிறப்பித்தது
18 1 1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் அமைச்சரவை ஆலோசகராக நியமனம் பெற்று அதை வரவேற்று விடுதலை ஏட்டில் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள்
முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் ஒரு முழுமதி போலவும்
முள்ளை எதிர்த்து முன்வந்து நாம் நுகர வீசும் மணம் போலவும்
எவ்வளவுதான் நிந்தனையும் பழியும் சுமத்தப் பட்டாலும் மாற்றார் எவ்வளவுதான் தாக்கினாலும் தவறான பிரச்சாரம் செய்து வந்தாலும் நீதிக்கட்சி மணிகளின் ஒளியை மங்க வைக்கமுடியாது அத்தகைய மணிகளில் ஒன்றுதான் பெரியார் அவர்களின் அன்புக்கு பாத்திரமான தமிழர் எழுச்சியின் சித்திரம் திராவிட ரத்தினம் சர் பன்னீர்செல்வம் அவர்கள் லண்டனில் உள்ள பிரிட்டன் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் இந்திய அமைச்சர்கள் ஆலோசகராக அவர் நியமிக்கப் பட்டுள்ளார் 1940 மார்ச் 11ம் தேதி பதவியேற்பு அவர் பணியேற்றுக் கொண்டு பணியாற்ற தொடங்குவார்
போர்க்குணமும் தமிழர் வாழ்வுக்காகப் பணியாற்றும் திறனும் படைத்த சர் செல்வம் புதிய களம் சென்று புது முறையில் போர்புரிந்து தமிழரின் கீர்த்தியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு நம்பிக்கை வைக்கிறது வாழ்க செல்வம் என்று வாயார மனதார வாழ்த்துகிறது என்று எழுதி அண்ணா அவர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி வாழ்த்தினார்.
விமான விபத்து
1940 பெப்ரவரி 25 தமது சொந்த ஊரான செல்வபுரத்தில் இருந்து தன் குடும்பத்தினரிடம் கண்ணீரோடு விடைபெற்று பின் சென்னைக்கு வந்து சென்னையில் இருந்து அறிவாசான் தந்தை பெரியார் உள்ளிட்டோர் அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்து பயணம் சென்னையிலிருந்து மும்பைக்கு தொடர் வண்டியில் மும்பையில் இருந்து கப்பல் மூலம் கராச்சி சென்று அங்கே அவருக்காகவே வெள்ளை அரசால் அனுப்பப்பட்ட ஐரோப்பிய கண்டத்தில் போர் வியூகங்களை வகுப்பதில் கிறிஸ்து முன்பாக புகழ்பெற்ற ஹனிபால் இம்பீரியல் என்ற பெயர் கொண்ட விமானத்தில் இரண்டு ஆங்கிலேய ராணுவ அதிகாரி உடன் பறந்தார் மறுநாள் பெர்ஷிய அருகில் ஓமன் நாட்டு கடலில் அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிப் போனது தமிழருடைய சகாப்தம் முடிவுற்றது.
பெரியாரின் துயரம்
இதுகுறித்து 17 03 40 குடியரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் துயரத்தோடு எழுதினார்
என் மனைவி முடிவு எய்திய போது நான் மனம் கலங்கவில்லை
என் தாயார் இறந்தபோது 95 வயதுக்கு மேலும் வாழவில்லை என்று கருதுவது பேராசை அல்லவா என்று கருதினேன்
என் ஒரே அண்ணன் மகன் லண்டனில் படித்து விட்டு 20 வயதில் இறந்தபோதும் பதரவில்லை சிதரவில்லை ஆனால் பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கண்ணீர் மல்க எழுதினார் தமிழர்களின் சகாப்த நாயகனுடைய வரலாறு காலம் கடந்தும் பேசப்படும்.
– மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சி ஏ சத்யா அவர்களின் முகநூல் பதிவு.
Discussion about this post