தாய்ப்பால் அதிகரிக்க தேவையான உணவுகள்..! குறிப்பு -2
குழந்தைபெற்ற பெண்கள் பிறந்த குழந்தைக்கு கொடுக்கும் முதல் உணவு தாய்ப்பால், இது குழந்தைக்கு எல்லாம் விதமான ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. அப்படி ஆரோக்கியம் தரும் தாய்ப்பால் இன்னும் அதிகமாக சுரக்க இந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
கேழ்வரகு : கேழ்வரகை தண்ணீரில் ஊறவைத்து, நன்கு தண்ணீரை வடிகட்டி ஒரு காட்டன் துணியில் வைத்து கட்டி, சூரிய ஒளி படும் இடத்தில் தண்ணீர் சொட்டும்படி தொங்கவிட வேண்டும்.
பின் இந்த முளைகட்டிய கேழ்வரகை கஞ்சியாக காய்ச்சி குடித்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
பால் : தினமும் 5 அல்லது 6 கப் பால் குடித்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
சுறா : பால் சுறாவில் பூண்டு சேர்த்து புட்டாக செய்து சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
முருங்கை கீரை : முருங்கை கீரையை வாரத்தில் இருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதனால் தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும் இதன் மூலம் குழந்தைக்கும் இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும்.
பாசிப்பருப்பு : முளைகட்டிய பாசி பயிரை வெறும் வாயில் சாப்பிடலாம். அல்லது பாசி பருப்பை வேக வைத்து சாப்பிடலாம்.
அல்லது பாசி பருப்புடன் முருங்கை கீரையை வேக வைத்து, தாளித்து சாப்பிடலாம்.
பூண்டு : தினமும் இரவில் தூங்குவதற்கு முன் பாலில் பூண்டு சேர்த்து காய்ச்சிக் குடித்தால், தாய்ப்பாலும்
சுரக்கும் கருப்பையில் சேர்ந்துள்ள அழுக்கையும் அகற்றி விடும்.
பப்பாளி : பப்பாளியை பழமாகவோ அல்லது ஜூஸ் ஆக குடித்தால், தாய்ப்பால் சுரப்பதோடு, உடலுக்கு தேவையான சத்தையும் கொடுக்கிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..