“இன்னைக்கு ஒரு புடி…” கோவில் திருவிழாவில் பிரியாணி பிராசாதம்..!!
திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி கோவில் 90-ஆவது ஆண்டு பிரியாணி திருவிழா; 200 ஆடுகள், 200 க்கும் மேற்பட்ட சேவல்கள், 2500 கிலோ அரிசி கொண்டு பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி வடக்கம்பட்டி கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற முனியாண்டி திருக்கோயில் 90 ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு 200 ஆடு 200 கோழி 2500 கிலோ பிரியாணி அரிசி சுவாமிக்கு பிரியாணி சமைத்து கிராம மக்கள் அனைவருக்கும் சுமார் 20,000 மேற்பட்ட கிராம மக்களுக்கு பிரசாதமாக வழங்கும் திருவிழா வடக்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற வருகிறது.
வடக்கம்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முனியாண்டி திருக்கோயில் உள்ளது இந்த திருக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாம் வெள்ளி சனிக்கிழமையில் ஆடு கோழி நேர்த்திக்கடனாக செலுத்தும் பக்தர்கள் அனைவரிடமும் நேர்த்திக்கடனாக பெற்று ஆடு கோழி பிரியாணி சமைத்து அதிகாலை 5 மணிக்கு பிரசாதமாக மக்களுக்கு வழங்கப்படும் வடக்கம்பட்டி சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள கள்ளிக்குடி அகத்தபட்டி வில்லூர் அனைத்து கிராம மக்கள் அனைவருமே அதிகாலையில் பக்தர்களுக்கு சுட சுட பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.
முனியாண்டி கோவிலில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றும் அனைவருக்கும் ஆடு கோழி போன்றவை தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற பிறகு நேர்த்திகடனாக வாங்கி கொடுப்பது வழக்கமாக உள்ளது
இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி,வில்லூர்,அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர்.
இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும்.
இவ்விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி மத பேதமில்லாமல் அனைவருக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சி என தெரிவித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..