“வேங்கைவயல் விவகாரம்..” தவறான கருத்துக்கள்..!! தமிழக அரசு கோரிக்கை..!!
வேங்கைவயல் விவகாரத்தில் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தமிழ்நாடு குற்றப் பிரிவு துறைக்கு மாற்றினார். அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் முத்துக்காடு காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையாவை பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது ஆதாரப்பூர்வமாக உறுதியானது.
அதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட புகைப்படங்கள், மற்றும் செல்போன் உரையாடல்கள், சாட்சிகளின் அறிக்கைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது.
இதனை அடுத்து முரளிராஜா சுதர்ஷன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோரின் மீது சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..