“இன்னைக்கு ஒரு புடி..” சிக்கன் சாப்பிடும் போட்டி..!!
தருமபுரி அடுத்த முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று குழந்தைகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள், கணவன் மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி, கணவன் மனைவியை தாங்கி பிடிக்கும் போட்டி. பண் சாப்பிடும் போட்டி. குறைந்த நேரத்தில் ஒரு கிலோ சிக்கன் சாப்பிடும் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சிக்கன் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் கஜேந்திரன் என்பவர் மூன்று நிமிடத்தில் ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிட்டு சாப்பாட்டு ராமனாக வெற்றி பெற்றார். லோகநாதன் என்பவர் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.
இதனையடுத்து பெண்களுக்கான பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இதில் 2 அரை நிமிடத்தில் ரம்யா என்ற பெண்மணி முதலிடமும், இந்திராணி என்பவர் இரண்டாம் இடமும் சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு வெற்றி பெற்றார். முக்கல் நாயக்கன்பட்டி கிராம மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து குழந்தைகள் முதல் பெரியோர்கள், கணவன் மனைவிமார்களுக்கும் விதவிதமான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..