வாய் தகராறால் பரிபோன வாலிபர் உயிர்…!! பரபரப்பான ராணிப்பேட்டை..!!
நெமிலி அடுத்த திருமால்பூரில் இரு தரப்பு வாலிபர்கள் இடையே ஏற்பட்ட தகராறு. முன்விரோத காரணத்தில் 2 வாலிபர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட பாமகவினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த சூர்யா (எ) தமிழரசன் (24), அதே பகுதியை சேர்ந்த விஜயகணபதி (24) ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது திருமால்பூர் பகுதியை சேர்ந்த பிரேம் (25) என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சூர்யா மற்றும் விஜயகணபதியை ஓரமாக நில் என கூறியுள்ளார். இதில் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் முன் விரோதம் ஏற்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூர்யா,விஜயகணபதி இருவரும் கிரிக்கெட் விளையாடி விட்டு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரேம் தனது நண்பர்களுடன் அந்த இடத்தில் வந்து மீண்டும் சூர்யாவிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் பிரேம் மற்றும் சூர்யா, விஜயகணபதி ஆகிய இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர்.
இதில் ஆவேசமடைந்த பிரேம் அந்த வழியாக வந்த ஒருவரிடம் பெட்ரோல் வாங்கி சூர்யா மீது ஊற்றி கொலை செய்து விட்டு பிரேம் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் விஜயகணபதி தீயை அணைக்க முயன்று உள்ளார். அதில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கதினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அறிந்து ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் பனப்பாக்கம் பள்ளூர் சாலையில் அமர்ந்து குற்றவாளியை கைது வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏ.டி.எஸ்.பி குணசேகரன் தலைமையில் போலீசார்சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி விரைவில் குற்றவாளி கைது செய்வோம் என்று உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தனி படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க இரவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பட்டப்பகலில் இரு வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து காலை நெமிலி பஸ் நிலையம் அருகே குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் மாவட்ட தலைவர் செல்வக்குமார், அமைப்பு செயலாளர் அ.ம. கிருஷ்ணன், இளைஞர் சங்கம் செயலாளர் சக்கரவர்த்தி, உட்பட்ட 200 மேற்கொண்ட பாமகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏ.டி.எஸ்.பி தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் திடீரென சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..