குழந்தை வரம் கிடைக்க, நாகதோஷம் நீங்க..!! இந்த திருத்தலத்திற்கு சென்றால் போதும்..!!
திருமணம் ஆன பின் பலரும் எதிர் பார்ப்பது குழந்தையை தான், ஆனால் ஒரு சிலருக்கு குழந்தை வரம் கிடைப்பதில்லை. இதற்காக பலரும் மருத்துவம் மற்றும் கோவில் களுக்கு சென்று வழிபடுவது உண்டு, இன்றைய தகவலில் நாம் காண இருப்பதும் குழந்தை வரம் தரும் நாகராஜர் பற்றி தான்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் ஹரிபாடு அருகேயுள்ள மன்னார்சாலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. நாகராஜர் கோயில், இக்கோவிலின் சிறப்பு வழிபாடு “உருளி கவிழ்த்தல்”. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோவிலுக்கு சென்று, நாகராஜர் மற்றும் சர்ப்பயக்சி அம்மனை வழிபாடு செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று பலரும் சொல்கின்றனர்.

குழந்தை வரம் வேண்டி, பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து ஜாதி மதம் பார்க்காமல், வேண்டி செல்வார்கள்.
குழந்தை வரம் மட்டுமின்றி நாகதோஷம் , தீராத வியாதிகள் குணமாக வேண்டியும் வழிபாடு செய்வார்கள்.
இந்த வழிபாடுகள் பற்றி பார்க்கலாம்.
* மனநிலை பாதிப்பு, துஷ்ட சக்திகள் தொல்லை, நாக தோஷத்தால் ஏற்படும் குறைந்த ஆயுள் காலம் போன்ற வற்றிற்கு, நாக தோஷ வழிபாடு சிறந்தது. இதை சரி செய்ய கும்பம் வைத்து வழிபட வேண்டும்,
* உடல் நலம் பெற உப்பு வைத்து வழிபட வேண்டும்,
* தீய எண்ணங்கள் நீங்க மஞ்சள் வைத்து வழிபட வேண்டும்,
* ஆரோக்கிய மான வாழ்க்கைக்கு மிளகு, கடுகு, சிறு சிறு பயிர்கள் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்,
* நாக தோஷம் நீங்க தங்கத்தில் செய்யப்பட்ட புற்று, நாகத்தின் முட்டை மற்றும் மரம், பூமி உருவ பொம்மைகள் செய்து வழிபாடு செய்ய வேண்டும்,
* நீண்ட ஆயுள் காலத்திற்கு நெய் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்,
* நினைத்த காரியங்கள் வெற்றி அடைய பால் மற்றும் கதலிப்பழம் வழிபாடு,
* குழந்தை பாக்கியம் பெற மஞ்சள் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
மேற்கண்ட வழிபாடு முறைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபாடு செய்து வந்தால் நினைத்த செயல்கள் அனைத்தும் நடக்கும்.
மேலும் இது போன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்…