இப்படி பண்ண இனி எப்படி ஏடிஎம் ல காசு எடுக்க முடியும்..?
சத்துவாச்சாரியில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி காவல் துறையினர் விசாரணை
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலையில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் ஏடி எம் மையம் உள்ளது. இந்த மையத்தினுள் மர்ம நபர்கள் புகுந்து ஏடி எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
பின் ஏடிஎம் வெளியில் இருந்து ரகசிய கண்காணிப்பு கேமராவையும் சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த ஏடிஎம் கொள்ளை முயற்சி குறித்து சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்க முயன்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டமுள்ள பகுதியில் உள்ள ஏடி எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த மர்ம நபர்கள் எடிஎம்மை உடைத்து காசை எடுக்க முயன்றதுடன் மட்டுமின்றி.., அருகில் இருந்த வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..