மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஹோலி வாழ்த்து கூறியுள்ளார்.
நாட்டின் பல்வேறு இடங்களில் ஹோலி பண்டிகை இன்று(மார்ச்.18) உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிறத்தையும் கொண்டு வரட்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஹோலி வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் இனிய ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பரஸ்பர அன்பு, சகோதரத்துவம் மற்றும் அனைத்து வண்ணத்திலான மகிழ்ச்சியையும் உங்கள் வாழ்வில் கொண்டுவரும்’ என பதிவிட்டுள்ளார்.