வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்தால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் அண்ணாமலை சொல்வது உண்மையா..?
நம்முடைய அரசியல் அமைப்பு சட்டம் மத்திய அரசுக்கு ஒரு பவர் மாநில அரசுக்கு ஒரு பவர் என்று தான் உள்ளது. ஆனால் இங்கு ஒரு மாநில அரசு தன்னிச்சையாக, தண்ணீர் வழங்க மாட்டேன் என்று கூறும் பொழுது அது அரசியலமைப்பு சட்டத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறது.
காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி பலமுறை ஆட்சியில் இருந்த கட்சி தான். கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் புதிதானவர்கள் அல்ல, காவிரி நீர் பிரச்சினையைப் பொறுத்தவரை இவர்கள் ஏதோ சிறு பிள்ளைகள் வந்து அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க மாட்டேன், காவிரி நீர் மேலாண்மையை மதிக்க மாட்டேன் என்று சொல்வது போல் உள்ளது.
உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும், என்று கூறிவிட்டால் இப்பொழுது கர்நாடகா என்ன சொல்லும்?. இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே கர்நாடகா அரசு கேள்வி குறியாகிறது.
கர்நாடகாவிற்கும் இரண்டு மூன்று மாநிலங்களில் இருந்து தண்ணீர் உள்ளே வருகிறது அந்த மாநிலங்களும் கர்நாடகாவிற்கு இது போன்று கூறிவிட்டால் என்ன செய்வார்கள்..?
வட மாநிலத்தில் இருந்து யாராவது தமிழகத்திற்கு வந்தால் அவர்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும், 15 லட்சத்திற்கும் மேல் வடமாநில தொழிலாளர்கள் இங்க இருப்பதாக மாநில அரசு புள்ளி விபரங்கள் கூறுகிறது.
மத்திய அரசை பொருத்தவரை ஒரு நாடு ஒரு ரேசன் கார்டு என்பதை கூறுகிறது, இதனால் ஒருவர் எங்கிருந்தாலும் ரேசன் பொருட்களை பெற்று கொள்ள முடியும். இதை தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் தவறாக புரிந்து கொண்டு பிரச்சாரங்களை செய்கின்றனர்.
கல்வியை பொறுத்தவரை வீடு தேடி கல்வி என்பதை மத்திய அரசு கொரோனா காலத்தில் கொண்டு வந்தது. இதனை மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொது விழிப்புணர்வு அனைவரிடத்திலும் உள்ளது.
Discussion about this post