10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக்,ஐடிஐ செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று(மார்ச்.24) நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் அரசுப்பள்ளிகளில் 10வது முடித்து ஐடிஐ சென்றாலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், அரசுப்பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். அரசு பள்ளி மாணவிகள் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிகள் சென்றால் மாதம் ரூ.1000 என அறிவித்தார்.
காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கல்லூரி கட்டடங்கள் கட்டப்படும்.
டாஸ்மாக் நிர்வாகம், வணிகவரித்துறை உள்ளிட்டவை சீர்திருத்தப்படும். நிதித்துறையில் ஒற்றைச்சாளர முறை கொண்டுவரப்படும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மைனிங் கொள்கை உருவாக்கப்படும். என குறிப்பிட்டார்.