தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2023-24ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். எந்தெந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய திட்டங்களுக்கான நிதி எவ்வளவு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…
– நகர்ப்புற வளர்ச்சிக்கு 38 ஆயிரத்து 444 கோடி ஒதுக்கீடு
– குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் துறைக்கு 4 ஆயிரத்து 778 கோடி ரூபாய் ஒதுக்கீடு
– பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை என இரண்டிற்கும் சேர்த்து கல்விக்கு என 47 ஆயிரத்து 266 கோடி ரூபாய் ஒதுக்கீடு
– ஊரக வளர்ச்சி துறைக்கு 22 ஆயிரத்து 562 கோடி ரூபாயும், நெடுஞ்சாலைகள் துறைக்கு 19 ஆயிரத்து 465 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
– சமூக நலன் துறைக்கு 7 ஆயிரத்து 745 கோடி ரூபாயும், போக்குவரத்து துறைக்கு 8,056 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
– எரிசக்தி துறைக்கு 10 ஆயிரத்து 694 கோடி ரூபாயும், நீர் வளத்துறைக்கு 8 ஆயிரத்து 232 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
– ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் துறைக்கு 3 ஆயிரத்து 513 கோடி ரூபாயும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 18 ஆயிரத்து 661 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post