ட்விட்டர் பயனர் ஒருவர், காதலியுடன் பிரேக்அப் ஆனதால் HeartBreak Insurance மூலம் ரூ.25,000 பெற்றதாக ட்வீட் செய்துள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
காதல் எப்போது வரும் என்பது பலருக்கும் தெரியாது. சிலருக்கு முதல் பார்வையிலேயே காதல் வரும். மற்றவர்கள் பல வருட நட்புக்குப் பிறகு காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இருந்தாலும் காதலில் விழுந்தாலும் அதே வேகத்தில், பிரேக்அப்பும் சுலபமாகி வருகிறது.
சிறு சிறு விஷயங்களுக்கு கூட பிரேக் அப் எளிதானதாக மாறி வருகிறது. முக்கியமாக காதலர்களுக்கிடையே சில புதிய நபர்கள் நுழையும் போது பிரேக்அப் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இப்படி காதல் தோல்வியடையும் போது பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒரு யோசனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளம் பெண்ணிடம் ஏமாற்றப்பட்ட இளைஞர் ஒருவர் இன்சூரன்ஸ் (பிரேக்அப் இன்சூரன்ஸ் பாலிசி) மூலம் ரூ.25 ஆயிரம் கிடைத்துள்ளதாக பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார். ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட் இப்போது வைரலாகி வருகிறது.
ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்… ஆனால் இந்த காதல் முறிவு காப்பீடு என்றால் என்ன? ஆம், உண்மைதான்.. காதலில் விழுந்த ஒரு ஜோடி நெஞ்சம் பதற வைக்கும் காப்பீட்டு நிதியை உருவாக்கியுள்ளது. பிரதீக் ஆர்யன் என்ற ட்விட்டர் பயனர் தனது பதிவில், காதலர்கள் இருவரும் அவர்கள் காதலிக்க தொடங்கிய போது மாதம் தோறும் ரூ.500 வீதம் Joint Bank Account-ல் டெபாசிட் செய்ததாக கூறியுள்ளார்.
யார் பிரேக்அப் செய்கிறார்களோ அவர்கள் அந்த பணத்தை மற்றவருக்கு விட்டுவிட வேண்டும் என ஒப்பந்தம் செய்துக்கொண்டதாகவும், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த பெண் பிரேக்அப் செய்ததால், அவருக்கு ரூ.25,000 கிடைத்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
Discussion about this post