சாலை வசதி கூட இல்லாத திருப்பூர் உடுமலை கிராம்..!! சாலைவசதி இல்லாததால் மருத்துமனைக்கு செல்ல முடியாத மலைவாசி உயிரிழப்பு..!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குருமலை எனும் ஒரு மலை பகுதி உள்ளது. அதில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைவாழ் மக்களுக்கு முறையான சாலை வசதி இல்லாததால், கடைகள் மட்டுமின்றி மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்தாலும் கூட, 5 கிலோ மீட்டர் தூரம் வரை காட்டுப் பாதையின் வழியாக நடந்து செல்ல வேண்டி இருக்கும்.
இந்நிலையில் நேற்று குறுமலையைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 37 எனும் மலைவாசி மக்களில் ஒருவரான அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகியுள்ளது. உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு சாலை வசதி இல்லாத அந்த பாதையில் , தொட்டில் கட்டி ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை மூர்த்தியின் உடலை கொண்டு சென்றுள்ளனர். மலை பகுதியை விட்டு கீழ் இறங்கியபின் திருமூர்த்தி மலையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் அங்கு இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார்.
பின் திருமூர்தியின் உறவினரக்ள, அவரது உடலை குருமலைக்கு திரும்ப எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனர். சாலை வசதி சரியில்லாமல போனதால், திருமூர்த்தி மலையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். சாலை வசதி இல்லாததால் மருத்துமனைக்கு சரியான சமையதிற்கு அவர் கொண்டு செல்ல முடியாததால் அவர் உயிர் இழந்தார் என்று உறவினர்கள் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.