திருவள்ளூர், மீஞ்சூர் அரியன் வாயலில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!!
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெகன் நகர் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் எவரடிநகர் பொழுதுபோக்கு பூங்காவிற்காக பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சட்ட விரோதமாக அந்த பகுதி இருப்பதாகவும். எந்த விதி முறைகளையும் பின் பற்றாமல் அங்கு வசிக்கும் பொது மக்களின் சுகாதாரத்தை சீரழிக்கும் குப்பை கழிவு களை தரம் பிரிக்கும் வளமீட்பு பூங்காவினை அமைத்து தர வேண்டுமென கூறினார்.
பூங்கா அமைக்க முயற்சித்து அவசரகதியில் பணிகளை செய்து வரும் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகிகள், நிர்வாகத்தினை கண்டித்து அரியன் வாயல் பஜார் வீதியில் அப்பகுதியில் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த வள மீட்பு பூங்காவினை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்திற்கு மாற்றிடவும் இப்பகுதி நிலத்தடி நீரை கெடுத்திடாமல் அரியன்வாயல் பகுதியை குப்பை கழிவு களின் மண்டலமாக ஆக்கி விடாமல் வருங்கால சந்ததியினரின் வாழ்வாரத்தை சீரழிக்க வேண்டாம் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவ்வழியே வேறொரு நிகழ்ச்சிக்காக சென்ற பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனின் வாகனத்தை வழிமறித்து முற்றுகையிட்டு தங்கள் போராட்டத்திற்கான காரணத்தை விளக்கி கூறி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கோரிக்கைவிடுத்தனர்.., இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் வாகன நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது..
Discussion about this post