திருப்பதி ஏழுமலையான் கோவில்- தரிசனம் டிக்கெட் வெளியீடு..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றன. முக்கிய விஷேச நாட்களில் பக்தர்களின் கூட்டம் லட்சத்திற்கும் மேல் காணப்படுகின்றன. தொடர் விடுமுறை நாட்கள் என்றால் இன்னும் அதிகமாக தான் காணப்படுவார்கள்.
தற்போது கோடை விடுமுறை என்பதால், ஏழுமலையானை தரிசனம் செய்ய நேற்று ஒரே நாளில் மட்டும் 1.5லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
எனவே திருப்பதி தேவசஸ்தானம் மார்ச் 27ம் தேதி காலை 11மணிக்கு. தரிசன டிக்கெட்டின் விலையை 300 ரூபாய் என அறிவித்தது. அறிவித்த சில நிமிடத்திலேயே மொத்த டிக்கெட்டுகளும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து ஜூன் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.
அதை பெற விரும்பும் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானம் எனும் http://thirupathibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
தரிசனம் செய்வதற்காக, டிக்கெட் முன் பதிவு செய்யும் பக்தர்கள். தவறுதலாக ஏதேனும் செய்துவிட்டாலோ அல்லது டிக்கெட்டை ரத்து செய்தாலோ, குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பின்னரே பணம் திருப்பி தரப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.