தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல் ஹாசன் தற்போது படங்களில் நடிப்பதற்கும் , தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கமல் ஹாசனை வைத்து மலையாள இயக்குனர் மகேஷ்நாராயணன் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்று அரவிக்கப்பட்டது. இப்போது அதுகுறித்த அப்டேட் ஒன்றை இயக்குனர் பகிர்ந்துள்ளார்.
உலகநாயகன் கமல் ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது கமல் காசன் மீண்டும் சினிமாவில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தற்போது பல படங்களை தயாரித்தும், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் அச்.வினோத் மற்றும் மணிரத்தினம் இயக்கத்திலும் நடிக்க இருபதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவர் மலையாள இயக்குனர் மகேசநாராயணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கமல் ஹாசன் தெரிவித்திருந்தார். இந்த படம் தேவர் மகன் 2 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படம் துவங்குவதற்கு முன்பேர கைவிடபட்டுவிட்டது என்று பரவலாக பேசபட்டு வந்தது.
இந்நிலையில் இயக்குனர் மகேஷ்நாராயணன் பேட்டி அளித்தார் அதில், இல்லை இல்லை, அது கிடப்பில் போடப்படவில்லை. இது கமல்ஹாசன் சாரின் ஸ்கிரிப்ட் தற்போது அவர் வேறு படங்களில் பிஸியாக இருக்கிறார் எனவே, படத்திற்கு தாமதமாகிறது. ஆனால், அது கிடப்பில் போடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் கமல்ஹாசனின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.