டிராகன்ஸ் படத்தில் இணைந்த மூன்று இயக்குனர்கள்..!!
ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். அடுத்தபடியாக லவ்டுடே என்ற படத்தை இயக்கி அதே படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இவரின் அடுத்த படமாக டிராகன் என்ற படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து தான் இப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கையாடு லோகர் நடிக்கின்றனர்.
தற்போது இந்த திரைப்படத்தில் மூன்று இயக்குனர்கள் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது மயில்வாகனன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின், வாலே குமார் கதாபாத்திரத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், பரசுராம் கதாபாத்திரத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..