மூன்று குற்றவியல் சட்ட நகல்கள் எரிப்பு போராட்டம்..!! பரபரப்பான திருப்பூர்..!!
ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக்கரஷா மற்றும் பாரதிய சாஷ்ய அதினயம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் அரசியலில் சட்டத்திற்கு எதிரான மனித உரிமைகளை பறிக்கின்ற வகையில் இருப்பதாக குற்றம் சாட்டியும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட அவிநாசி ஒன்றிய குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மூன்று குற்றவியல் சட்ட நகல்கள் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிய ஏந்தியவாறு,
ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முற்பட்டனர், அப்போது அவிநாசி போலீசார் குறுக்கிட்டு சட்ட நகல்களை பறித்து சென்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..