இந்த ஒரு படம் தான் தன்னை யார் என்று காட்டியது…!!
இந்த ஒரு படம் தான் நடிகர் பாண்டியராஜனின் திறமை வெளிப்படுத்தியதோடு தான் ஒரு சிறந்த நடிகர் என்றும் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்படி அவரின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்த படம் என்ன என்று விரிவாக இதில் படிக்கலாம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் தற்போதைய குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தான் பாண்டியராஜன். இவருக்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டம் உண்டு. அதற்கு காரணம் அவரது வெகுளித்தனமான பேச்சும் குறும்புத்தனமான சேட்டைகளும் தான்.
அவர் குள்ளமான தோற்றத்தை கொண்டதால் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது, நிராகரிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் தன் மீது இருந்த நம்பிக்கையால் பல இடங்களில் வாய்ப்பு தேடி சென்றார். அதன் பலனாக ஆண்பாவம் மற்றும் பாட்டி சொல்லை தட்டாதே போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் நடித்த அந்த இரண்டு படங்களுமே வெற்றி என சொல்லலாம்.
அதன் பின்னர் காலம் மாறி போச்சு, கோபாலா கோபாலா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தார். அதன் பின்னர் பிரபு மற்றும் ரேவதியை வைத்து கன்னிராசி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி இவர் திறமையை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டியது. அதன்பிறகு இவர் இயக்கி நடித்த ஆண்பாவம் திரைப்படம் 225 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் சினிமாவில் ஒரு சாதனை படைத்தது. இந்த வெற்றியின் அடையாளமாக பாண்டிராஜ் எனும் பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஆண்பாவம் திரைப்படம் தான்.
சமீபத்தில் தேசிய குறும்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் சாதாரண மனிதனாகவும் ஒரு காமெடி நடிகனாக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் மூன்று பல்கலைக்கழகங்களில் பகுதி நேர ஆசிரியர் வேலை பார்த்து வருகிறேன் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சினிமா ஒரு நல்ல தொழில் அதை நம்பி அவர்கள் யாரும் இதுவரை வெற்றி பெறாமல் இருந்ததில்லை எனவும்,ஒரு சிலர் வெற்றி பெறாமல் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
நான் ஆண்பாவம் என்ற படத்தை எடுத்தேன் அந்த படத்தில் வந்த வருமானத்தில் வீடு மற்றும் கார் திருமணம் அனைத்தையும் ஒரே படத்தின் வருமானத்திலேயே செய்து முடித்தேன் என தெரிவித்தார். உழைப்பால் அனைவராலும் வெற்றி பெற முடியும் என நம்பி வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒருகாலத்தில் கஷ்டப்பட்டவர்கள் தான் என இவ்வாறே அவர் பேசினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..