“ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி…” இந்தியாவிற்கு கிடைத்த மைல் கல்…!
இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் 2 செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டத்தை வெற்றி பெறச் செய்தது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. கடந்த 30-ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஸ்பேடெக்ஸ்-பி, ஸ்பேடெக்ஸ்-ஏ ஆகிய 2 செயற்கைக்கோள்களை சுமந்தபடி விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டின் இரு பாகங்கள் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. தீவிர ஆய்வுக்கு பிறகு இரண்டையும் இணைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில், ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஸ்பேடெக்ஸ் திட்ட வெற்றியால் உலக அளவில் இந்திய விஞ்ஞானிகளுக்கும், இந்திய நாட்டிற்கும் புகழ் சேர்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவிற்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது.
இதற்கு காரணம் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பும், திறமையும், விடா முயற்சியும், அர்ப்பணிப்பான பணியும் தான். ஸ்பேடெக்ஸ் திட்டத்தை வெற்றி பெறச் செய்ய பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை பலரும் பாராட்டி வருகின்றனர். இஸ்ரோ தலைவராக தமிழ்நாட்டின் நாராயணன் பொறுப்பேற்ற பிறகு இது முதல் வெற்றி என்பது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறிப்பிடதக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..